×

ெடங்கு கொசுக்கள் ஒழிப்பு பணி தீவிரம்

அரூர், அக்.18:  அரூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 18 வார்டுகளிலும், தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணிகளை அரூர் சப் கலெக்டர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) சேகர், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். அப்போது, டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : mosquito mosquitoes ,
× RELATED உலக புகையிலை ஒழிப்பு தினம்