பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் கே.ஜி.பி.வி உண்டு உறைவிட பள்ளிக்கு கணித ஆசிரியர்கள் தேர்வு

தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்டம் கே.ஜி.பி.வி பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், சீட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி மற்றும் காரிமங்கலம் கே.ஜி.பி.வி உண்டு உறைவிட பள்ளிகளில் தலா ஒரு கணித ஆசிரியை நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியிடத்திற்கு மாத சம்பளமாக ₹22 ஆயிரம் வழங்கப்படும். நியமனம் அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியை விட்டு செல்லாமல், உண்டு உறைவிட பள்ளியிலேயே தங்கி இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணிதம் பாடத்தில் இளநிலை பட்டம் மற்றும் அதனுடன் பிஎட் மற்றும் டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள், பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணியசிவா மணி மண்டபம் அருகில் உள்ள கே.ஜி.பி.வி பள்ளியில் சமர்ப்பிக்க ேவண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Maths Teachers Examination for Schooling ,Papparapatti ,Karimmangalam KGPV ,
× RELATED பாப்பாரப்பட்டி அருகே டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்