×

தர்மபுரி அருகே ஏஎஸ்டிசி நகரில் பிரதான குழாய் உடைப்பால் குடிநீர் விநியோகம் பாதிப்பு


தர்மபுரி, அக்.18: தர்மபுரி அருகே ஏஎஸ்டிசி நகருக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால், கடந்த 3 வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாமல், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி- பென்னாகரம் சாலையில் ஏஎஸ்டிசி நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் கனமழையால் ஏஎஸ்டிசி நகரை வெள்ளம் சூழ்ந்தது. அதிகாரிகள் பொக்லைன் மூலம் சாக்கடை கால்வாயை அகலப்படுத்திய பின்னர், மழைநீர் வடிந்தது. பொக்லைன் இயந்திரம் மூலம் சாக்கடை கால்வாயை அகலப்படுத்தியபோது, பிரதான குடிநீர் குழாய் சேதமானது. இதனால், கடந்த 3 வாரத்திற்கு மேலாக ஒகேனக்கல் குடிநீர் ஏஎஸ்டிசி நகருக்கு வருவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஏஎஸ்டிசி நகர் பகுதியில், சாக்கடை கால்வாயை அகலப்படுத்த தோண்டியபோது, பிரதான குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால், எங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கடந்த 3வாரமாக விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Tags : Pipe Breakdown ,Dharmapuri ,ASTC ,
× RELATED திருவள்ளூர் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி