×

ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி மறியல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை

தேவதானப்பட்டி/ பெரியகுளம், அக். 18: மேற்கு தொடர்ச்சிமலைகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பெரியகுளம் வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்போக நெல்சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்தது. இதனால் வராகநதி ஆற்றில் தண்ணீர் வந்து கண்மாய்கள் நிரம்ப ஆரம்பித்தன. கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்ததால் முதல்போக நெல் சாகுபடி தொடங்க தாமதமானது. ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையினால் கண்மாய்கள் நிரம்பிவருகின்றன.இந்த நிலையில் வடகிழக்கு முன்னதாக தொடங்கியதாக கூறப்பட்டது. மேல்மங்கலம் பகுதியில் செல் ஒருசில இடங்களில் நெல் நடவு பணி தொடங்கியுள்ளது. ஜெயமங்கலம், சில்வார்பட்டி பகுதிகளில் தொழிஉழவு பணி தீவிரமடைந்துள்ளது. பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் இன்னும் உழவு பணி தொடங்கவில்லை. இந்த பகுதியில் இந்த வாரம் உழவு பணி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் நெல் சாகுபடி நல்லமுறையில் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.பெரியகுளம்பெரியகுளம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 599 கன அடியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126 அடியும் நிரம்பி வழிகிறது.மேலும் மேற்கு தொடர்ச்சி மற்றும் கல்லாற்று மலைப்பகுதியில் தொடர்ந்து இரவு பகலாக கனமழை பெய்ததால் கல்லாறு, கும்பக்கரை, செலும்பு ஆறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆறுகளில் ஓடும் வெள்ளநீர் வராகநதியில் கலப்பதால் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வராகநதியின் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் வராகநதியின் கரையோர மக்களான வடகரை, தென்கரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


Tags : Western Ghats ,Western Province ,
× RELATED கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விடிய விடிய கனமழை