×

வராக நதியில் வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை துர்நாற்றம் வீசிய ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி மறியல் போராட்டம்

போடி, அக். 18: போடியில், நேற்று தரமில்லாத ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அரிசியை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போடி நகராட்சி 1வது வார்டு புதூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நியாய விலைக் கடை எண் 21 மூலம் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலையில் இந்த கடையில் விலையில்லா அரிசி பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.அந்த அரிசி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான துர்நாற்றத்துடன் தரமில்லாமலும், புழுக்களுடனும் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நியாய விலைக் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு வழங்கும் அரிசியை தான் நாங்கள் விநியோகம் செய்கிறோம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாங்கள் வாங்கிய விலையில்லா அரிசியை போடி -மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் தேவர் சிலை அருகே சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த திடீர் பஸ்மறியலால் நியாயவிலைக் கடையில் அரிசி விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அரிசியை சாலையில் கொட்டி மறியல் செய்த சம்பவத்தால் போடியில் பரபரப்பு நிலவியது.

Tags : Waraka River ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?