×

உலக உணவு தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி, அக். 18: தேனி தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் உலக உணவு தினத்தை முன்னிட்டு நேற்று கோட்டூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.தேனி தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ஆறுமுகம், சீதாலட்சுமி மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பள்ளி முன்பு தொடங்கிய ஊர்வலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சுற்றி வந்தது. சத்தான உணவுகளின் அவசியம், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் என்னென்ன, உடலுக்கு கேடு தரும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து மாணவிகள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி விளக்கி கூறினர்.


Tags : World Food Day Awareness Procession ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...