×

மாநில செஸ் போட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு

பரமக்குடி, அக்.18:  பரமக்குடி,ராமநாதபுரம், மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான செஸ் போட்டி தொண்டி இஸ்லாமியா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் 3 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேனிலைப் பள்ளி மாணவர் டி.சக்தி தியானேஷ்(14) வயதுக்குட்பட்ட பிரிவு செஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்த மாணவர் இம்மாத இறுதியில் நடைபெறும் மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்கிறார். மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் சக்தி தியானேஷ் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுரு ராஜா, அன்வர்ராஜா ஆகியோரை தாளாளர் சாதிக் பாட்ஷா, ஜமாத் தலைவர் முகம்மது யாக்கூப், செயலாளர் கமருல் ஜமாலுதீன், பொருளாளர் அபுல்கலாம் ஆசாத், தலைமையாசிரியர் அஜ்மல்கான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : state chess competition ,
× RELATED திருச்செங்கோட்டில் மாநில செஸ் போட்டிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு