×

நாளை மின்தடை

திருமங்கலம், அக். 18:திருமங்கலத்தில் நாளை மின்தடை செய்யபடுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:திருமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (அக்.19) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். திருமங்கலம் நகர், உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.Tags :
× RELATED உழவர்களின் அடிமடியில் கை...