நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

மதுரை, அக். 18: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி நசீமா பானு தலைமையில், லோக் அதாலத் நீதிபதி (பொ) மதுசூதணன், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி தீபா ஆகியோர் நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.இதில் நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்படவுள்ளது.

Advertising
Advertising

Related Stories: