வைகையில் இருகரை தொட்டுச் செல்லும் மழைநீர்

சோழவந்தான், அக். 18: சோழவந்தான் வைகையாற்றில் மழைநீர் இருகரையை தொட்டு அதிகளவில் செல்வதால் பொதுமக்கள் ஆற்றுப் பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தற்போது மழை பெய்து வைகை அணைக்கு அதிக நீர் வரத்து வருகிறது. இதனால் பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தொடர்மழை பெய்ததால், வைகை அணைக்கு கீழ் பகுதியில் இணையும், வராக நதி, மஞ்சளாறு, சிறுமலை ஆறு ஆகியவற்றின் நீர் வைகையில் இருகரையையும் தொட்டு அதிகளவில் செல்கிறது. ஆகையால் வைகை ஆற்றுப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Advertising
Advertising

இந்நிலையில் நேற்று மாலை சோழவந்தான் காமராஜர் பாலம், பேட்டை மற்றும் முள்ளிப் பள்ளம் தடுப்பணைகளை பார்வையிட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை அளவிட்டு கூற இயலும். இது மூன்று ஆறுகளின் மழைநீர் என்பதால் வரத்து நீரின் அளவு கணக்கிட முடியாது. நேற்று மதியம் 500 கனஅடி வந்த நீர், மாலை 3000 கன அடியாக கூடியுள்ளது. மழையால் நீர் வரத்து மேலும் கூடலாம். எனவே பொதுமக்கள் ஆற்றுப் பகுதிக்கு செல்லாமல், பாதுகாப்புடன் இருக்க வேண்டுகிறேன்” என்றார்.உடன் உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவிப் பொறியாளர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.பெங்களூரு சென்ற பொருட்கள் மதுரை வருமா?கீழடியில் மத்திய தொல்லியில் துறை சார்பில் 2015ல் அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட பொருட்கள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories: