மதுரை மாவட்டம் முழுவதும் மழை

மதுரை, அக். 18: மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பேரையூரில் 53 மி.மீ. பெய்தது.வடகிழக்கு பருவமழை நேற்றுமுன்தினம் தொடங்கி தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் முழுவதும் 2 நாளாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. நேற்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை மி.மீ. அளவில் வருமாறு:பேரையூர்- 53, மதுரை தெற்கு- 25, தல்லாகுளம்- 20, விரகனூர்- 29, 20 விமான நிலையம்- 37, உசிலம்பட்டி- 36, சோழவந்தான் - 29, மேலூர்- 27,  மேட்டுப்பட்டி- 26, திருமங்கலம்- 20, புலிப்பட்டி- 18, ஆண்டிபட்டி - 17, சாத்தியாறு- 17, இடையபட்டி- 17, குப்பணம்பட்டி 15, வாடிப்பட்டி- 12, கள்ளிக்குடி- 9, திண்ணியமங்கலம்- 10, சிட்டம்பட்டி- 7, கள்ளந்திரி- 10.

Advertising
Advertising

Related Stories: