கள்ளிக்குடி ரூ.49 லட்சம் கொள்ளையில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை முக்கிய தடயம் சிக்கியது?

திருமங்கலம், அக். 18: கள்ளிக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மயக்க மருந்து கொடுத்து ரூ.49 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள எஸ்பி நத்தம் பெருமாள்பட்டியில் கமிஷன்மண்டி நடத்தி வருபவர் பாண்டிகண்ணன் (40). மனைவி ராமலட்சுமி (37). நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியிடம் குடிநீர் கேட்டு குடிப்பதுபோல் நடித்த இரண்டு வாலிபர்கள் அவரது கழுத்தில் கத்தி வைத்து முகத்தில் மயக்க மருந்தால் பொத்தி மயக்கமடைய செய்து வீட்டிலிருந்த ரூ.49 லட்சம் ரொக்கபணம், 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

கிராமத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. மணிவண்ணன் அறிவுறுத்தலின்பேரில் திருமங்கலம் டிஎஸ்பி அருண் உத்தரவுபடி எஸ்ஐக்கள் சரவணன், ஆனந்த் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பாண்டிகண்ணனின் உறவினா–்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முக்கிய தடயம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: