தோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா? பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல், அக். 18: பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. லும் பண்டிகைக்கு முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்கியுள்ளது. அட்வான்ஸ் தொகையானது பத்து மாத தவணையில் பிடித்தம் செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மண்டல அலுவலக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார் கூறுகையில், ‘பண்டிகை முன்பணம் என்பது ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்க வேண்டும் என்ற சம்பள சட்ட முறை பின்பற்றப்படவில்லை. தீபாவளி போனஸ் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லை.  மேலும் ஒன்பது நாட்களே தீபாவளிக்கு இருக்கும் நிலையில் தெழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே அகவிலைப்படி நிலுவை, வருங்கால வைப்பு நிதியில் கல்வி மருத்துவம் போன்றவற்றிற்கு கடன் வழங்காதது, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு ஆயுள் இன்சூரன்ஸ் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்ட வேண்டிய நிலுவை போன்றவையும் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு இதனை புரிந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகளை தீபாவளி பண்டிகைக்காக இயக்க இருக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட நிலையில் தள்ளாமல் பணப்பலன்களையாவது அரசும், நிர்வாகமும் உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்’ என்றார்.

Related Stories: