×

சித்தரேவில் பெண் தற்கொலை

பட்டிவீரன்பட்டி, அக். 18: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு அமைதிபூங்கா பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்டன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (40). 2 ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த அக்.14ம் தேதி கிருஷ்ணவேணி விஷம் அருந்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிருஷ்ணவேணி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : Woman suicide ,
× RELATED இளம் பெண் தற்கொலை