பழநி கோயிலில் காலியிடங்களால் தேக்கமடையும் பணிகள்

பழநி, அக். 18: பழநி கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முன்னாள் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.   பழநி கோயில் முன்னாள் முதுநிலை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகி அங்கமுத்து தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:     தமிழகத்தில் அதிக பக்தர்களின் வருகை மற்றும் அதிக வருவாய் உள்ள கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐஏஎஸ் அந்தஸ்த்தில் அதிகாரி செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், பழநி கோயிலில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிகள் தேக்கநிலை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, தமிழக அரசு காலியாக உள்ள பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.    1959ம் ஆண்டிற் முன் கோயில் ஊழியர்களாக இருந்தவர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களாக மாற்றப்பட்டனர். அதுபோல் தற்போது அறநிலையத்துறை ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.

Advertising
Advertising

பழநி கோயில் நிர்வாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறை ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. பக்தர்களின் பிரதிநிதிகளாக யாரும் இல்லாத நிலையில் நிர்வாக அதிகாரிகளே தக்காராக இருந்து பல கோடி ரூபாய் அளவிலான பணிகளை செய்துள்ளனர். எனவே, பழநி கோயிலில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அனைத்த பணிகளின் உண்மைத் தன்மையை கண்டறிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். பழநி நகரில் தற்போது சொத்துவரி உள்ளிட்ட வரிகள் மிகவும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே, வரி உயர்வை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழையளவுதிண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றைய மழையளவு விபரம்திண்டுக்கல்- 22.4 மி.மீ, கொடைக்கானல்- 103 மி.மீ, பழனி- 14 மி.மீ, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்)- 20.2 மி.மீ, நத்தம்- 3 மி.மீ, நிலக்கோட்டை- 23.4 மி.மீ, வேடசந்தூர்-24.6 மி.மீ, வேடசந்தூர் (டுபாக்கோ ஸ்டேஷன்)- 24.6 மி.மீ, காமாட்சிபுரம்- 15.4 மி.மீ, கொடைக்கானல் போட் கிளப்- 125 மி.மீ மொத்தம்- 375.6 மி.மீ, ஆவரேஜ்- 37.56 மி.மீ.

Related Stories: