ஒட்டன்சத்திரத்தில் இளம்பெண் கடத்தல்?

ஒட்டன்சத்திரம், அக். 18: ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி ராயக்கவுண்டன்புதூரை சேர்ந்த லட்சுமணன் மகள் இளவரசி (22). வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இவரை காவேரியம்மாபட்டியை சேர்ந்த செல்வம் என்பவர் கடத்தி சென்று விட்டதாக இளவரசியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: