மாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு

வேலூர், அக்.18: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிசாமி, மாநிலத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள், நீர்வரத்து மற்றும் பாசனக்கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள், பிளாஸ்டிக் ஒழிப்புப்பணிகள், டெங்கு ஒழிப்புப்பணிகள் செயல்படுத்தப்படுவதையும், பிரதமரின் வீடு கட்டும்  திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டப்பட்டு வரும் வீடுகள் தொடர்பாகவும் நேரில் கள ஆய்வு செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள், கண்காணிப்பு பொறியாளர்கள் 12 பேரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர்கள் அமர் குஷாவா ஐஏஎஸ்(வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு), மனோகரசிங்(திருவண்ணாமலை), முத்துமீனாள்(தூத்துக்குடி, விருதுநகர்), அப்துல்ரசிக்(கடலூர், பெரம்பலூர், அரியலூர்), ராஜஸ்ரீ(தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர்), லஷ்மிபதி(சேலம், நாமக்கல், காஞ்சிபுரம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஈரோடு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு பொறியாளர்கள் குத்தாலிங்கம், ஹரிகிருஷ்ணன்(திருப்பூர், கரூர், நீலகிரி), சரவணகுமார்(மதுரை, புதுக்கோட்டை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர இணை இயக்குனர்கள் கதிரேசன்(தேனி, திண்டுக்கல்), மகேஷ்பாபு(ராமநாதபுரம், சிவகங்கை), நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் ஜி.ராதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் கள ஆய்வு அறிக்கையை வரும் 31ம் தேதிக்குள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: