×

வந்தவாசி அருகே துணிகரம் அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன், ₹25 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

வந்தவாசி, அக்.18: வந்தவாசி அருகே அரசு ஊழியர் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் 5 சவரன் நகைகள், ₹25 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மா(45). இவர் வந்தவாசி வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி கொண்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

சிகிச்சை முடிந்ததும் நேற்று முன்தினம் அனைவரும் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும், அதில் இருந்த 5 சவரன் நகைகள், ₹25 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து பத்மா வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், டிஎஸ்பி தங்கராமன், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Tags : mystery monks ,house ,servant ,Vandavasi ,
× RELATED கடலூரில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் 10 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு