×

மணமேல்குடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

மணமேல்குடி,அக்.18: மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவர் வினோதினி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் சித்ரகலா. மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் பேசுகையில், அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீடு மற்றும் கடைகள் அருகே பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றில் மழைநீர் தேங்காத வண்ணம் பாதுகாத்து கொள்ள வேண்டும், காய்ச்சல் ஏதும் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவரை அணுக வேண்டும், காய்ச்சிய நீரை பருக வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மணமேல்குடி பாகிசுதாகர், முன்னாள் கவுன்சிலர் அண்ணா, வர்த்தகசங்க நிர்வாகிகள் ரஜினி, செல்வம், வாசன் உட்பட பொதுமக்கள், மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுச்சேரியில் மின்விநியோகத்தை...