×

சித்தன்னவாசலில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

புதுக்கோட்டை, அக்.18: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சித்தன்னவாசல் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட சித்தன்னவாசலை சேர்ந்த பன்னீர் செல்வம் (32), என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Tags :
× RELATED கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு...