×

கருப்புக்குடிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்

பொன்னமராவதி,அக்.18: பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியில் வரும் 20ம் தேதி இலவச பொது மருத்துவ முகாம் நடக்கின்றது. கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்;பப்பள்ளியில் 20ம் தேதி காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை நடைபெறும் இலவச மருத்துவமுகாமில் பெண்களுக்கான சிகிச்சை, குழந்தைகளுக்கான சிகிச்சை, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை மற்றும் பொதுவகையாக மருத்துவம் பார்க்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம், கருப்புக்குடிப்பட்டி இளைஞர் நற்பணி மன்றம், துர்கா மருத்துவமனை மற்றும் விக்னேஷ் மருத்துவமனை ஆகியோர் நடத்துகின்றனர்.

Tags : Free General Medical Camp ,
× RELATED வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்