×

புதுகை அரசு மருத்துவமனையில் உலக விபத்து தினம் கடைபிடிப்பு

புதுக்கோட்டை, அக்.18: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக விபத்து தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் மருத்துவ மாணவர்களும், மருத்துவர்கள் கலந்து கொண்டு, நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் விபத்தை தவிர்க்கும் விதங்கள் குறித்தும், விபத்து வந்த பிறகு செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினர். தொடர்ந்து மருத்துவ மாணவர்களும், மருத்துவம் சார்ந்த மாணவர்களும் காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இதில் மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டு பேசுகையில், விபத்தில் சிக்கியவர்களை மனிதாபிமானத்தோடு பார்த்து உடனே 108 ஆம்புலன்சுக்கு முதல் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வரும் வரை ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவது, எலும்பு முறிவு ஏற்பட்ட இடம் நகராமல் இருக்க கட்டுபோடுவது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள அனைவரும் கற்று கொள்ள வேண்டும் என்றார். இதில் விபத்து காய மற்றும் அவசர சிகிச்சை தலைமை மருத்துவர் சலீம் அப்துல் குத்தூஸ், உதவி மருத்துவர் ராஜா, நிலைய மருத்துவ அலுவலர் ரவிநாதன், துணை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : World Accident Day ,Pudukkai Government Hospital ,
× RELATED டெல்லியில் மதவழிபாட்டு கூட்டத்தில்...