×

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை கடிதம் சிக்கியது

தஞ்சை, அக். 18: தஞ்சையில் கடன் தொல்லையால் கண்ணாடி தொழிலில் ஈடுபட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. தஞ்சை- நாகை ரோடு அலமேலு நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் ரவி (45). இவரது மனைவி மாலதி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தஞ்சை மானம்புசாவடி சின்ன ஆஸ்பத்திரி அருகே கண்ணாடி வேலைபாடுகள் செய்யும் கடையை ரவி வைத்திருந்தார். இந்நிலையில் ரவிக்கு சிலருக்கு கடன் கொடுத்தனர். அந்த பணம் வசூலாகவிலலை. மேலும் ரவிக்கு கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். மேலும் ரவி தொழிலில் நஷ்டத்தை சந்தித்தார்.

இதனால் மனமுடைந்து நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு ரவி தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்து மாலதி பார்த்தபோது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் இறப்பதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் தன்னிடம் கடன் வாங்கியவர்கள் தராததாலும், தனக்கு கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்ததாலும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : debt scandal ,
× RELATED கடன் முறைகேடு விவகாரம் ஐசிஐசிஐ சந்தா கோச்சரின் 78 கோடி சொத்து முடக்கம்