சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 18: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம், பணி வரன்முறை, ஓய்வூதியம், தனித்துறை, பொட்டல முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தரும.கருணாநிதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தங்க.பிரபாகரன், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில இணை செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : bargaining workers ,
× RELATED காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி