வாலிபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்தவர் கைது

கும்பகோணம், அக். 18: கும்பகோணம் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் பெருமாண்டி, மெயின் ரோட்டில் வசிப்பவர் பிரகாஷ் (31) இவர் நேற்று முன்தினம் சுவாமிமலை கீழவீதியில் உள்ள தேரடி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த குடவாசலை சேர்ந்த பரணிதரன் (29) என்பவர் பிரகாசிடம் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.200 எடுத்து கொண்டு தப்பியோட முயன்றார். அபபோது பிரகாஷ் கூச்சலிட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து பரணிதரனை பிடித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிந்து பரணிதரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: