பொய் வழக்கில் பெண்ணுக்கு சிறை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கு 3 லட்சம் அபராதம்

சென்னை:  கொடுங்கையூரை சேர்ந்த பார்வதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ம் ஆண்டு கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ.க்கள் ஆறுமுகம், சதீஷ்குமார் ஆகியோர், என்னை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, லத்தி மற்றும் பூட்ஸ் காலால் தாக்கினர். பின்னர் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து,  சிறையில் அடைத்தனர்.  எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

வழக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட  3 பேருக்கும் சேர்த்து 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கிவிட்டு, இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேரிடமும் இருந்து தலா 1 லட்சம் வீதம் வசூலித்துக்கொள்ளலாம், என உத்தரவிட்டார்.

Related Stories: