×

உடல் நலக்குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம்

சென்னை, அக். 18: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவலர் பாலாஜி, செய்யூர் எஸ்ஐ ரமேஷ்பாபு ஆகியோர் பணியின்போது, உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் அடுத்த களியனூரை சேர்ந்தவர் கோபி (36). இருளர் குடியிருப்பில் வசிக்கும் இவர் கடந்த 15ம் தேதி, நசரத்பேட்டையில் மரம் வெட்டச் சென்றுள்ளார்.  

மரக்கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறியபோது, திடீரென இடி இடிக்க தொடங்கியது. உடனே அவர், சுதாகரித்து கொண்டு கீழே இறங்க முயற்சித்தார். அப்போது திடீரென வந்த இடி தாக்கியதில் கோபி, மரத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இடி தாக்கி உயிரிழந்த கோபி குடும்பத்தினருக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ₹4 லட்சத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Tags : policemen ,road accidents ,
× RELATED குலம் தழைக்க அருள்வார் குருநரசிம்மர்