×

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு, அக். 18: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் ராமு. இவரது மகள் கலைச்செல்வி (23). இவருக்கும் மறைமலைநகர் சங்கரதாஸ் தெருவை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் இளவரசன் (26) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது கலைச்செல்விக்கு நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. ஆனால் இளவரசன், மேலும் வரதட்சணை கேட்டு கலைச்செல்வியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதுபோன்று, அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில், 4 மாத கர்ப்பிணியான கலைசெல்வியிடம், நேற்று முன்தினம் இரவு இளவரசன் தகராறு செய்து, அடித்து உதைத்துள்ளார். பின்னர், அவர் வெளியே சென்றுவிட்டார்.

வெளியே சென்ற இளவரசன், வீடு திரும்பியபோது, அறையின் கதவு பூட்டியிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று போது, அறையில்உள்ள மின்வி சிறியில் தூக்கிட்டு கலைச்செல்வி சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிைடயில், மகளின் இறப்பு செய்தி கேட்டு ராமு வந்தார். அவர், போலீசாரிடம் ‘எனது மகளை அவரது கணவன், வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, கொலை செய்துவிட்டார்.  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : suicide ,dowry death ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை