திண்டிவனத்தில் செயல்படாத மதுவிலக்கு போலீசார்

திண்டிவனம், அக். 18: திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபாட்டில் விற்பவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதன் பேரில் வெள்ளிமேடுபேட்டை, ரோஷணை, ஒலக்கூர், பிரம்மதேசம், மயிலம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் அவ்வப்போது சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிரம் காட்டினால் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வருபவர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்தால் குற்றசெயல்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் மதுவிலக்கு காவலர்கள் ரோந்து செல்லும் போது பிடிபடும் மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு விற்பதும், மதுபாட்டில்கள் கடத்தி வரும் நபர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு விட்டு விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தனிப்படை போலீசார், உள்ளிட்டவர்கள் பிடித்து மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் நபர் மீது மட்டுமே வழக்கு பதியப்படுவதாகவும் தெரிய வருகிறது.ஆகையால் மாவட்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்தால் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வருபவர்களையும், கள்ளசாராயம் விற்பவர்களையும் கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: