அதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா

திருக்கோவிலூர், அக். 18: திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி பகுதியில் அதிமுக கட்சியின் 48ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஓன்றிய செயலாளர் டிஎஸ்பி. பழனிசாமி தலைமை தாங்கினார். அதிமுக கட்சியின் 48ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய துணை செயலாளர் செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் மகாராஜன், கலாவதிகுமார், கிளை செயலாளர்கள் முருகன், சீனுவாசன், சேகர், முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன், ஏமப்பேர் வினாயகம், பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: