×

மாணவி கர்ப்பம் கலைப்பு போக்சோ சட்டத்தில் தாய், கள்ளக்காதலன் கைது

கடலூர், அக். 18:  பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வழக்கில், தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.கடலூர் அருகே உள்ள ஏ. வடுகபாளையத்தை சேர்ந்தவர் தயாளன் மகன் சுகுமாரன்(33). இவருக்கு கடலூர் பகுதியில், விதவை பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறி அடிக்கடி சுகுமாரன் அப்பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த விதவை பெண்ணின் பிளஸ் 2 படிக்கும் மகளுடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தபழக்கம் நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில் சுகுமாரன் தனது கள்ளக்காதலியான விதவை தாயுடன் சேர்ந்து மாணவிக்கு கருக்கலைப்பு செய்து உள்ளனர். கடலூர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். சுகுமாரன் மற்றும் மாணவியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED ஆத்தூர் தலைவாசல் அருகே இருசக்கர...