×

பெண்ணாடம் அருகே தீப்பிடித்து கார் எரிந்தது

பெண்ணாடம், அக். 18: பெண்ணாடம் அடுத்துள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(33). இவர் பெண்ணாடத்தில் வாடகை கார் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் பெண்ணாடத்தில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். சின்னகொசப்பள்ளம் அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்கத்தில் புகை வந்துள்ளது. இதை கண்ட சுப்ரமணியன் இறங்கி வந்து பார்த்தபோது, கார் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து  தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்தது.இது தொடர்பாக பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கூடலூரில் காட்டுயானை காரை...