×

திருமணம் செய்வதாக கூறி வங்கியில் பணியாற்றிய பெண்ணை ஏமாற்றிய தனியார் கம்பெனி ஊழியர் அதிரடி கைது

பண்ருட்டி, அக். 18:  நெல்லிக்குப்பம் அண்ணாநகரில் வசித்து வருபவர் நித்யா (28). இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கஸ்டமர் கேரில் பணியாற்றி வருகிறார். தினந்தோறும் வங்கி கடன் கொடுப்பது சம்பந்தமாக கஸ்டமர் கேர் என்ற முறையில் தொலைபேசியில் பேசுவது வழக்கம். இதுபோல் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வரும் பண்ருட்டி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயகாந்த் (28) என்பவரிடம் கடந்த 4 வருடத்துக்கு முன்பு வாடிக்கையாளர் என்ற முறையில் போன் செய்து பேசியுள்ளார். கடன் வழங்குவது சம்பந்தமாக பலமுறை பேசி வந்த பழக்கத்தில் இருவரிடையே காதல் மலர்ந்தது. 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தொடர்ந்து ஒன்றாக பழகி வந்துள்ளனர். இதில் நித்யாவை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி அவரிடம் விஜயகாந்த் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நித்யா கேட்ட போது விஜயகாந்த் மறுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நித்யா கட்டாயப்படுத்திய போது வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் வேதனையடைந்த நித்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விஜயகாந்தை கைது செய்தனர்.

Tags : company ,
× RELATED தனியார் நிறுவனம் தயாரித்துள்ள அமெரிக்க விண்கலம்!