×

இளம்பெண் தூக்கில் தற்கொலை

சேத்தியாத்தோப்பு, அக். 18: சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தவர் அட்சயா (18). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அட்சயா மருத்துவமனை மாடியில் தான் தங்கியிருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகி கன்னியாஸ்திரி ஆரோக்கியமேரி கொடுத்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் ராமதாஸ், எஸ்பியின் உளவு பிரிவு ஏட்டு திருமுருகன், தனிப்பிரிவு காவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை இழந்த அட்சயா சென்னையில் உள்ள ஒரு இல்லத்தில் தங்கியிருந்தார். அவரை மருத்துவமனை வேலைக்காக சமீபத்தில் தான் அழைத்து வந்திருந்தனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Tags :
× RELATED தாம்பரத்தில் வடமாநில இளம் தம்பதி...