×

சின்னகொசப்பள்ளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்

பெண்ணாடம், அக். 18: பெண்ணாடம் அருகே சின்ன கொசப்பள்ளம், இருளம்பட்டு, பெரியகொசப்பள்ளம் ஆகிய 3 கிராமங்கள் சின்ன கொசப்பள்ளம் ஊராட்சியில் உள்ளன. இந்த மூன்று கிராமத்திலும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதில் பெரியகொசப்பள்ளம் கிராமத்தில் மட்டும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு கிராமங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, வடிகால் வசதி, சாலை வசதி என அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், பல கட்டமாக போராட்டம் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை என கூறுகின்றனர். இதனால் இருளம்பட்டு கிராமத்தில் உள்ள இளைஞர்கள், தாங்களாகவே முன்வந்து மூங்கில் மூலம் கிராமத்தில் நிழற்குடை அமைத்துள்ளனர். உடனடியாக சின்னகொசப்பள்ளம், பெரியகொசப்பள்ளம், இருளம்பட்டு ஆகிய கிராமங்களை தனித்தனி ஊராட்சியாக பிரித்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnagosapallum Panchayat ,facilities ,
× RELATED முடிதிருத்தும் மற்றும் அழகு...