வி.கே.புரத்தில் மழையால் வீடு இடிந்தது

வி.கேபுரம், அக். 18:  வி.கே.புரம் டாணா மேட்டுப்பாளையம் தெருவில் வசித்து வருபவர் மனோகரன். இவர், கோவையில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு  இவரது மனைவி முத்துமாரி, மகன் சிவா ஆகியோர் வீட்டில் தூங்கிக்  கொண்டிருந்தனர். அப்போது இடியுடன் கனமழை பெய்த நிலையில், திடீரென வீட்டின் மேற்கூரை சரிந்தது. சத்தம் கேட்டு எழுந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.

Advertising
Advertising

Related Stories: