களக்காடு அருகே அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

களக்காடு, அக். 18:  களக்காடு அருகே கீழதேவநல்லூரில் அமமுகவினர் 200க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாநில  வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் முன்னிலையில் திமுகவில்  இணைந்தனர். இதில் திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், களக்காடு ஒன்றிய செயலாளர்  ராஜன், கீழதேவநல்லூர் தேர்தல் பொறுப்பாளர் மாரியப்பன், மானூர் ஒன்றிய  செயலாளர் கடற்கரை, மேலநீலிதநல்லூர் ஒன்றிய  முன்னாள் செயலாளர் வெற்றி  விஜயன், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்தையா பாண்டியன், ஆலங்குளம்  வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கீழப்பாவூர் ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபாலன்  வக்கீல் பொன்ராஜ், மாரியப்பன், வெற்றி விஜயன், சாய், சங்கர், சதீஸ்  ஜேசுராஜன், கடையம் ஜெயக்குமார் மன்சூர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

Related Stories: