காங். வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஏர்வாடியில் எஸ்டிபிஐ செயல்வீரர்கள் கூட்டம்

நெல்லை, அக். 18: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சியின் நாங்குநேரி தொகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் ஏர்வாடியில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தலைவர் இம்ரான் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முல்லை மஜீத் வரவேற்றார். மாவட்ட தலைவர் எஸ்எஸ்ஏ கனி துவக்கி வைத்துப் பேசினார். மாநில செயலாளர் அஹமது நவவி கலந்து கொண்டு ரூபி மனோகரன் வெற்றிக்கான செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார்.  கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய சிறுபான்மை பிரிவு ஆலோசகர் அமீர்கான், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா, நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சித்திக், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரீமா பைசல், எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா உள்ளிட்டோர் பேசினர்.  மாவட்ட தலைவர் ஜன்னத் ஆலிமா, மருத்துவ சேவை அணி தலைவர் பேட்டை ஜெயலாணி, செயலாளர் பர்கிட் சேக், எஸ்டிடியூ மாவட்ட செயலாளர் பசீர்லால், செயற்குழு உறுப்பினர்கள் பாளை ஜிந்தா, ஏர்வாடி சேக், மகளிர் அணி மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா, நெல்லை தொகுதி தலைவர் காசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் பர்கிட் அலாவுதீன் நன்றி கூறினார்.

Related Stories: