கலைத்திறன் போட்டிகள் கெய்ன்ஸ் பள்ளி சாதனை

வள்ளியூர், அக். 18:  தெற்கு கள்ளிகுளம் சமாரியன் அறக்கட்டளை சார்பில் 12வது ஆண்டு கலைத்திறன் போட்டிகள், புனித அலாய்சியஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஜூனியர் பிரிவில் கெய்ன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், சீனியர் பிரிவில் இரண்டாமிடமும் கெய்ன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஐந்தாம் இடத்தையும் மற்றும் சுழற்கோப்பையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர்கள் செல்வநாயகம், வசந்தா செல்வநாயகம், முதல்வர் சாம் டேவிட், துணை முதல்வர் விஜயலட்சுமி. கெய்ன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் பழனியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: