திருச்செந்தூர் ஜிஹெச் அருகே வாலிபர் மர்மச்சாவு

திருச்செந்தூர், அக். 18:  திருச்செந்தூர்  அரசு மருத்துவமனையின் மேல் பகுதியில் ரோடு உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர்  இறந்து கிடந்தார். இதுகுறித்து விஏஓ கணேசபெருமாள் தாலுகா போலீசில் புகார்  செய்தார். எஸ்ஐ செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் சென்று பார்த்தனர்.  இறந்தவர் மொட்டை போட்டுள்ளார். கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்.  மேலும் லுங்கியும், முழுக்கை சட்டையும் அணிந்துள்ளார். அவர் வைத்திருந்த  பையில் ஒரு துண்டு சீட்டு இருந்தது அதை எடுத்து பார்த்தபோது, அந்த சீட்டு  பரமன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெறப்பட்ட மருந்து சீட்டாகும்.  அதில் விக்னேஷ் வயது 21 என குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்தவர் நோயால்  அவதிப்பட்டு அதன் காரணமாக இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா? என விசாரணை  நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: