திருச்செந்தூர் கோயிலில் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர், அக். 18: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் திருக்கோயில் கடற்கரையில் கந்தன் குடில் வளாகத்தில் சுற்றுப்புறத்தை  காக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டினார். இதில் பாஜ உள்ளாட்சிப் பிரிவு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கபாண்டியன், திருச்செந்தூர் நகர பொருளாளர் வேல்குமார், நகர துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஆறுமுகநேரி நகரச் செயலாளர் சண்முகம், வினோத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: