×

தூத்துக்குடியில் கட்டுக்குள் டெங்கு

கோவில்பட்டி, அக். 18: தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார். கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு கலை மற்றும் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்  நடந்தது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி, முகாமை துவக்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இம்மாவட்டத்தில் தாமிரபரணி நதியைத் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வைப்பாற்றில் தூய்மை பணி துவங்கும்.  மாவட்டம் முழுவதும் டெங்குவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. 5 பேருக்கு மட்டுமே டெங்கு அறிகுறி இருந்தநிலையில் ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அடுத்து அவரும் பூரணமாக குணமாகி  விட்டார். மாவட்டத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களை தொடர்ந்து  கண்காணிப்பு செய்துவருவது மட்டுமின்றி, டெங்குகாய்ச்சல் அறிகுறி தென்பட்ட  பகுதிகளில் சென்று மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து  வருகின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் வருவோருக்கு தனி பிரிவாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தோறும் டெங்கு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட  சுகாதாரத் துறை அமைச்சர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்து பாராட்டி சென்றது குறிப்பிடத்தக்கது ’’ என்றார்.

Tags : Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!