தூத்துக்குடியில் மனித உரிமைகள் கழக முப்பெரும் விழா

தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடியில்  மனித உரிமைகள் கழகம் சார்பில் நடந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் 3  ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மனித உரிமைகள்  கழகத்தின் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர்  சாலையில் அமைக்கப்ப்டட மாவட்ட அலுவலகம்  திறப்பு விழா, கொடியேற்று விழா வி.வி.டி. சிக்னல் அருகிலுள்ள  மைதானத்தில் நலத்திட்டம் வழங்கும் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரும், வர்த்தக அணி  மாநில செயலாளருமான ஜெபசிங் தலைமை வகித்தார்.  மாநில பொருளாளர் டாக்டர் ஆனந்தி  குத்துவிளக்கு ஏற்றினார். மத்திய மாவட்டச் செயலாளர் வினோத்ராஜ், மாவட்ட  இளைஞரணி செயலாளர் அஸ்வின் துரை  வரவேற்றனர். கிழக்கு மாவட்டச் செயலாளர்  அருண் காமராஜ் விழா ஒருங்கிணைப்பு  பணிகளை செய்திருந்தார். இதில் மனித  உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணன், 3 ஆயிரம் பேருக்கு இலவச  வேஷ்டி, சேலை, நோட்டுபுத்தகம் என ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கிப் பேசினார்.

 இதில் சர்வதேச உரிமைகள் கழகத் தலைவர் வக்கீல்  அசோக்குமார், பொதுச்செயாளர்கள் குமரன், ரவிச்சந்திரன், அனைத்து சைவ வைணவ  இந்துக்கள் உரிமைகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், அனைத்து  மீனவர்கள் உரிமைகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அன்பு பிரகாஷ், மனித  உரிமைகள் கழக மாநில துணைத்தலைவர்கள் முரளிகவி, தேர்தல் பணிக்குழு சபரி  ராஜன், துணைத்தலைவர் செந்தில்குமார், பொதுச்செயலாளர் (தெற்கு) முகமது  ரிஜ்வான், முதன்மை செயலாளர் பாஸ்கரன், துணை பொதுச்செயலாளர் பொன்னுத்தாய்  வக்கீல் அணி  செயலாளர் கார்த்திக்கேயன், மாவட்ட நிர்வாகிகள் இசக்கிராஜ்,  அங்குராஜ், ராஜதுரை, இசக்கி கணேஷ், தங்கமாரியப்பன், காசிலிங்கராஜ், அனித  எஸ்தர் ராணி, புங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: