தூத்துக்குடியில் அதிமுக 48வது ஆண்டு விழா

தூத்துக்குடி, அக். 18:  தூத்துக்குடியில் அதிமுக  48வது ஆண்டு துவக்க விழா நடந்தது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட  அதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்டச் செயலாளர்  எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள்  மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.  சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி,  பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி செயலாளர்கள் டாக்  ராஜா, நடராஜன், ராஜசேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல்  ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகநயினார், ராஜ்நாராயணன், ராமசந்திரன்,  சௌந்திரபாண்டி, முன்னாள் மாநகர செயலாளர் ஏசாதுரை, தலைமைக்கழக பேச்சாளர்  கருணாநிதி, அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், வக்கீல்கள்  செல்வகுமார், வீரபாகு, முனியசாமி, முன்னாள் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மணி  மற்றும் நிர்வாகிகள் செரினா பாக்கியராஜ், மனோஜ்குமார், தனராஜ், பொதுக்குழு  உறுப்பினர் ஆயிஷா கல்லாசி மற்றும் தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: