×

முருகம்பாளையம் அருகே அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பூர், அக். 18:திருப்பூர் முருகம்பாளையத்தை அடுத்த புதுக்காலனி பகுதியில் அடிப்படை  வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையத்தை அடுத்த புதுக்காலனி பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் முறையாக தெருவிளக்கு  எரிவதில்லை, சாக்கடை அள்ளுவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில்  புதுக்காலனி பகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி அப்பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ேநற்று இரவு முருகம்பாளையம் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Murugampalayam ,
× RELATED விவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்