×

ஊராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

தாராபுரம், அக். 18: தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் ஊராட்சியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் கழிப்பிடம் கட்டும் பணியில் ஊழல் நடந்திருப்பதாக கூறியும், ஊழலுக்கு காரணமான ஊராட்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அலங்கியம் பஸ் நிலையம் அருகே விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் திருவளவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட அமைப்பாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் அன்பழகன்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vigilance demonstration ,panchayat administration ,
× RELATED திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில்...