×

காங்கயத்தில் நாளை மின்தடை

காங்கயம்,அக். 18:  காங்கயம் மின் கோட்டப் பொறியாளர் மருதாச்சலமூர்த்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ‘‘காங்கயம்  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (19ம் தேதி) காங்கயம் நகரம், சிவன்மலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், நால்ரோடு,அர்த்தனாரிபாளையம்,பொத்தியபாளையம், மற்றும் படியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் உடலை புதைக்க எதிர்ப்பு