உடுமலை நகராட்சியில் டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிப்பு

உடுமலை, அக். 18: உடுமலை நகராட்சியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றயை தினம் பள்ளி மாணவர்கள், குடியிருப்புகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, நேற்று (17-ம்தேதி) எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் அக்பர்அலி முன்னிலையில், மண்டல பூச்சியியல் வல்லுநர் எஸ்தர்ஜெரால்டின், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சேகர் ஆகியோர் டெங்கு காய்ச்சல் பரவும் விதம் குறித்தும், தடுப்பு நடவடிக்கை பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் டெங்கு சிகிச்சை முறை பற்றி விளக்கினார். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீர் தொட்டிகளை கொசுக்கள் புகாதவண்ணம் மூடி வைத்திட அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார், செல்வம்,  ஆறுமுகம், வட்டார மேற்பார்வையாளர் சோனை சதாசிவம், முருகன், பால்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், கல்லாபுரம் ஊராட்சி, ஆண்டியகவுண்டனூர் கிராமங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related Stories: