×

டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

முத்துப்பேட்டை, அக்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். இதில் மாணவிகள் பள்ளியில் மற்றும் வீடுகளில் சுகாதரத்தை கடைபிடிக்க வேண்டும், இந்த பருவமழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மாணவிகளுக்கு வர்த்தகக்கழக தலைவர் மெட்ரோ மாலிக், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவி.ரெங்கசாமி ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் அனிதா நன்றி கூறினார்.

Tags : Dengue Awareness Seminar ,
× RELATED ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு