கொசு உற்பத்தி அதிகமாக இருந்ததால் பனியன் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூர், அக். 18: திருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையில் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டதால் அங்குள்ள பனியன் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ பகுதிகளில் டெங்கு கொசு அதிகரித்து காய்ச்சல் பரவி வந்தது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது டெங்கு கொசுப்புழு உற்பத்தி அதிகரிக்க காரணமாக இருந்த சிட்கோ தொழிற்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அப்பகுதியில் இயங்கி வரும் பனியன் நிறுவனத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் நிறுவன கட்டிட உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.24 மணி நேரத்திற்குள் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினர்.மேலும், அப்பகுதியில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் தங்கி வேலை செய்து வருவதால் இந்தியிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: